பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்கிற திரைப்படம் வெளியானது. ஒமர் லுலு என்பவர் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பிரியா பிரகாஷ் வாரியர் என்பவர் அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் தனது புருவ சிமிட்டல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அவருக்கு அதன்மூலம் புருவ அழகி என்ற பட்டப்பெயரும் கூட கிடைத்தது.. தென்னிந்தியாவையும் தாண்டி இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கூட அவரைப்போன்றே பலரும் புருவ சிமிட்டல்கள் செய்து வீடியோக்கள் வெளியிட்டு வைரலாக்கினார்கள்.
அதன்பின் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்த பிரியா வாரியர் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் லவ் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியிந ஒரு பகுதியாக சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரியா பிரகாஷ் வாரியரிடம் அவரது புருவ சிமிட்டல்கள் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் அந்த படத்தில் புருவ சிமிட்டல் என்பது நானே யோசித்து உருவாக்கியது என்று கூறினார். இது அந்த படத்தின் இயக்குனரான ஒமர் லுலுவை அதிர்ச்சி அடைய வைத்தது.
காரணம் பிரியா பிரகாஷ் வாரியரை அப்படி புருவ சிமிட்டல் செய்ய வைத்தது நான்தான் என்று கூறியுள்ள ஒமர் லுலு, அந்த படம் வெளியான சமயத்தில் ஒரு பேட்டியின்போது இந்த புருவ சிமிட்டலை எனக்கு கற்றுத் தந்தவர் இயக்குனர் ஒமர் லுலு தான் என்று பிரியா வாரியர் கூறிய ஒரு வீடியோவையும் தற்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். மேலும் புருவ அழகுக்கு ஞாபக மறதி அதிமாகி விட்டது போலும்.. நாட்டு மருந்து எடுத்துக்கொண்டால் சரியாகும் என்றும் கிண்டல் அடித்துள்ளார்.